search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார் அளிக்க புதிய வசதி"

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க புதிய வசதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் இன்சென்ட் திவ்யா கூறி உள்ளார்.
    ஊட்டி:

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க புதிய வசதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் இன்சென்ட் திவ்யா கூறி உள்ளார்.

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, குழந்தைகள் நலக்குழு, இளைஞர் நீதிக்குழுமம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் புகார் அளிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் www.nc-p-cr.gov.in என்ற தேசிய இணையதள முகப்பு பக்கத்தில் மின்னணு புகார் பெட்டி என்ற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த புகார் பெட்டியில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றம் தொடர்பான சம்பவம் நடைபெற்ற இடம், குற்றம் செய்த நபர், தொடர்பு எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை பதிவு செய்யலாம். மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றால், அதுகுறித்த புகார்கள் காவல்துறையிடம் அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க தவறும் நபர்கள் மற்றும் புகாரினை பதிவு செய்ய தவறும் அலுவலர்களுக்கு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதித்து தண்டனை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×